மண் பரிசோதனை பொதுவாக நம் மாநிலத்தில் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மண் வகைகள் 1)செம்மண் 2)மணற்பாங்கான மண் 3)மணற்குறுமண் 4)குறுமண் 5)கரிசல்மண் 6)களிமண் 7)செம்புறைமண் 8)வண்டல்மண்(அ)அடைமண் என எட்டு வகையாக பாகுபடுத்தப்பட்டுள்ளன.ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கீழ் சாரல், முறம், இளம் பாறை, கடின பாறை ஆகிய வகை படிவுகள் அடுக்கடுக்காய் அமைந்துள்ளன. சில இடங்களில் இத்தகைய கடின வகை படுகைகள் மிகக் குறைந்த ஆழத்திலும், சில இடங்களில் அதிக ஆழத்திலும் காணப்படுகின்றன. மண்ணின் தன்மைகள் மண்ணிற்கு சில பொதுவான தன்மைகள் அல்லது குணங்கள் இயற்கையாக அமைந்துள்ளன. அவற்றில் சில நிறம், மணம், ருசி, மெண்மை, துகள்களால் அளவு, உப்பும் தன்மை, விரிந்து சுருங்கும் தன்மை, குழைவுத் தன்மை போன்றவை. மண்ணின் தன்மைகளில் பல அழுத்துதல், நெருக்குதல், இடித்தல், நனைத்தல், கலத்தல் போன்ற வெளிச் செயல்பாடுகளால் மாறக் கூடியவைகளாக அல்லது மாற்றப்படும் கூடியவைகளாக அமைந்துள்ளன. அவ்வாறு மாறக் கூடிய தன்மைகளில் சில ஈரம், வெற்றிட விகிதம், அடர்த்தி, திரட்சி, நெருக்கம், வெட்டு எதிர்ப்புத் திறன்,தாங்கு ...