கட்டுமான கம்பிகள்

தொடக்க காலத்தில் கான்கிரீட் தேவைகளுக்கு வலிமையில்லாத ரவுண்டு கம்பிகள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டு அதன் பலவீனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வலுவூட்டப்பட்ட டி. எம். டி(TMT) கம்பிகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் அழுத்தத்திறனை (Compression) எதிர்க்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் நீள்திறனை (Tension) எதிர்க்கும் ஆற்றல் அதற்குக் கிடையாது. எஃகுக் கம்பிக்கு நீள்திறனை எதிர்க்கும் ஆற்றல் உண்டு. கம்பியையும் கான்கிரீட்டையும் பொறியியல் சமன்பாட்டிற்கேற்ப (Engineering Equations) கலந்தால் அத்தகைய கான்கிரீட் நீள்திறனையும், அழுத்தத் திறனையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் ஆற்றல் பெறுகின்றது. கம்பிகளின் தன்மைகளும்&வகைகளும் 1) இலகுவான எஃகுக் கம்பிகள் (Mild Steel) 2)முறுக்கேறிய கம்பிகள் (Twisted Steel) 3)சூட்டில் உருட்டிய கம்பிகள் (Hot rolled Steel) இலகுவான எஃகுக் கம்பிகளை முறுக்கேற்றுவதன்(Twisting) மூலம் கம்பியின் செறிவு(Density) அதிகரிப்பதால் கம்பியின் நெகிழ்தகைவு (Yield Stress) கூடுகிறது. அதனால் கம்பியின் வலிமை கூடுகிறது. மேலும் முறுக்கேற்றிய கம்பிகள் சூட்டில் உருட்டிய கம்பிகள் மற்றும் வரித்தளை கம்பிகள்(Ribbed Bars) ஆகியவற்றின் மேற்பரப்பில் கோடுகள் காணப்படும். முறுக்கேற்றிய கம்பிகளின் மேற்புரத்தில் நீட்டு வாட்டத்திலும், குறுக்குவாட்டத்திலும் வரிகள் காணப்படும். சூட்டில் உருண்ட கம்பிகளின் மேற்பரப்பில் முறுக்கேற்றிய கம்பிகளின் மேற்புறத்தில் காணும் வரிகளோடு ஒரு அடையாளக் குறியும் காணலாம். இது நட்சத்திரம் போன்று அமைந்திருக்கும். வரித்தளைக் கம்பிகளின் மேற்பரத்தில் குறுக்கு வட்டத்தில் மட்டுமே அதாவது மீன் எலும்பு அமைப்பில் வரிகள் காணப்படும். 1)ரவுண்ட் கம்பிகளின் வலிமை சுமார் 250 N/mm2 2)சாதாரண முறுக்கும் கம்பிகளின் வலிமை சுமார். 400 N/mm2 3)டி.எம்.டி கம்பிகளின் வலிமை சுமார் 500 N/mm2 முறுக்கு கம்பிகள் CTD-(Cold Twisted Deformed) முறுக்கி கம்பிகள் TMT-(Thermo Mechanically Treated) சிடிடி(CTD) முறையில் கம்பிகள் முறுக்கப்படுவதால் அவை அதிகமாக துருப்பிடிக்கும். வளைக்கும் போது எளிதில் உடையும் டி. எம். டி(TMT) முறையில் கம்பிகள் வெப்பக் குளிரூட்டு முறையில் சுமார் 1000டிகிரி செல்சியசிலிருந்து 500டிகிரி செல்சியஸ் வரை பதப்படுக்கப்படுவதால் துருப்பிடிக்காத. வலிமை அதிகம். குறைந்த கார்பன் அளவினால் வளைக்கும் போது எளிதில் உடையது. இந்திய தர நிர்ணயக் கழகம் (ISI) கம்பிகளின் தரத்தை IS1786/1985™, FE415, F500 என்ற மூன்று கிரேடுகளாக பிரித்துள்ளது முறுக்கு கம்பிகள் 36 அடி நீளமும் டி. எம். டி கம்பிகள் 40 அடி நீளமும் கொண்டவை. 6 mm 2.7 kg 8 mm 4.8 kg 10 mm 7.5 kg 12 mm 10.8 kg 16 mm 19.2 kg 20 mm 30.0 kg 25 mm 46.0 kg கட்டுக் கம்பிகள்(Binding Wires) வளைந்த கம்பிகளை வடிவமைப்பிலோ(Form Work) தாங்கும் சாரத்திலோ(Centering) வைத்து பொறியாளர் கூறிய அமைப்பின்படி கம்பிகளைக் கூட்டிகட்ட உதவுவது கட்டுக் கம்பிகளேயாகும். இந்த கட்டு கம்பிகள் இரண்டு வகையில் கிடைக்கின்றன. (அ) முலாம் பூசிய இரும்புக் கம்பிகள்(Galvanised Iron Wire) (ஆ) கறுப்பு கம்பிகள்(Black Wire) முலாம் பூசிய இரும்புக்கம்பிகள் அதிகமாக இப்போது புழக்கத்தில் இல்லை. கறுப்புக்கம்பிகள்தாம் அதிகமாக கட்டட வேலையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவைகள் சில நேரங்களில் மிகவும் கடினத்தன்மை உடையதாக இருக்கும். அப்படியே இவைகளைக் கட்டும் பணியில் பயன்படுத்தினால் உடைந்துவிடும் அபாயம் உண்டு. இந்த உடையுந்தன்மையை (Brittleness) சூடேற்றி அழிக்கும் முறையில் (Annihilation) தவிர்க்கலாம். இத்தகையக் கம்பிச் சுருளைச் சூடேற்ற வேண்டும். நன்றாக சூடேற்றிய பின்னர், காற்றிலே சூடு குறையும்படிச் செய்ய வேண்டும். இப்படிச் சில முறை செய்தால் கம்பியிலுள்ள உடைந்துவிடும் தன்மையிழந்து, மென்மைபெறும். அதாவது நீள்தன்மை கூறுகின்றது. இதனால் கம்பிகள் முறுக்கேற்றும்போது உடைவதில்லை. எக்காரணம் கொண்டும் நீரை ஊற்றி குளிர்விக்கக்கூடாது ஏனெனில் அது முரட்டுத்தன்மையை மேலும் தூண்டிவிடும். தரமான கம்பிகளின்(சோதனை) ஒரு அடி நீளமுள்ள கம்பியை ஒரு முனையில் பிடித்துக் கண்டு மறுமுனையைத் தரையில் ஒரு தட்டு தட்டும் போது கம்பியில் அதிர்வுகள் ஏற்படுவதை உணர முடிந்தால் அது தரமான டி. எம். டி கம்பி என்றும். அதிர்வு எதுவும் ஏற்படவில்லையென்றால் அது வேறு வகை கம்பி என்றும் அறிந்து கொள்ளலாம். மேலும் டி. எம். டி கம்பிகள் வாங்கும் போது அதில் சோதனை செய்யப்பட்ட சான்றிதழ் உள்ளதா, ஐ. எஸ். ஐ தரச் சான்றிதழ் பெற்றவையா? கம்பிகளின் மேல் தர முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள கம்பியை 180 டிகிரி வளைத்து பின்னர் நேராக நிமிர்ந்தும் பொது உடைவதோ அல்லது விரிசல் ஏற்படுகிறது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அஸ்திவாரம் அமைப்பு

அடுக்குமாடி குடியிருப்பு