மண் பரிசோதனை
மண் பரிசோதனை
பொதுவாக நம் மாநிலத்தில் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மண் வகைகள்
1)செம்மண்
2)மணற்பாங்கான மண்
3)மணற்குறுமண்
4)குறுமண்
5)கரிசல்மண்
6)களிமண்
7)செம்புறைமண்
8)வண்டல்மண்(அ)அடைமண்
என எட்டு வகையாக பாகுபடுத்தப்பட்டுள்ளன.ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக் கீழ் சாரல், முறம், இளம் பாறை, கடின பாறை ஆகிய வகை படிவுகள் அடுக்கடுக்காய் அமைந்துள்ளன. சில இடங்களில் இத்தகைய கடின வகை படுகைகள் மிகக் குறைந்த ஆழத்திலும், சில இடங்களில் அதிக ஆழத்திலும் காணப்படுகின்றன.
மண்ணின் தன்மைகள்
மண்ணிற்கு சில பொதுவான தன்மைகள் அல்லது குணங்கள் இயற்கையாக அமைந்துள்ளன. அவற்றில் சில நிறம், மணம், ருசி, மெண்மை, துகள்களால் அளவு, உப்பும் தன்மை, விரிந்து சுருங்கும் தன்மை, குழைவுத் தன்மை போன்றவை. மண்ணின் தன்மைகளில் பல அழுத்துதல், நெருக்குதல், இடித்தல், நனைத்தல், கலத்தல் போன்ற வெளிச் செயல்பாடுகளால் மாறக் கூடியவைகளாக அல்லது மாற்றப்படும் கூடியவைகளாக அமைந்துள்ளன.
அவ்வாறு மாறக் கூடிய தன்மைகளில் சில ஈரம், வெற்றிட விகிதம், அடர்த்தி, திரட்சி, நெருக்கம், வெட்டு எதிர்ப்புத் திறன்,தாங்கு வலிமை, அழுந்தும் தன்மை, நீர்க்கசிவுத் தன்மை, நுழைவை எதிர்க்கும் தன்மை போன்றவை.
இவ்வாறு மாற்றப் படக் கூடிய தன்மைகளை, சில வேளைகளில், செயற்கை முறைகள் மூலம் நமது தேவைக்கேற்றப்படி மாற்றி அந்த மண்ணை நாம் பயன்படுத்தும்.
ஈரம் அல்லது ஈரப்பதம் என்பது மண்ணோடு கலந்துள்ள தண்ணீரின் அளவைக் குறிப்பிடும் சதவீத அளவாகும்.
மண்ணிலுள்ள இடைவெளிகளில் மழை நீர் அல்லது நிலத்தடி நீர் நிரம்பியிருக்கலாம். இந்த ஈரம் மண்ணின் இதர பல குணங்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. குறிப்பாக நன்றாக காய்ந்து சுருங்கிய நிலையில் மிக அதிக அளவில்
தாங்கு திறனையும், வெட்டு எதிர்ப்புத் திறனையும் பெற்றுள்ள அடர் களிமண் ஈரமடையும்போது,எளிதில் நசுங்கி, பிதுங்குவதன் காரணமாய் அவற்றின் வலிமைகள் வெகுவாய் குறைந்து அதன் விளைவாய் கட்டமைப்புகளின் அடித்தளம் அமிழ்தலுக்குள்ளாகிறது.
இது மட்டுமின்றி கருப்பு கரிசல் மண் போன்ற மண்ணானது ஈரமாகும் பொது உப்புதல் காரணமாய் அதன் கன அளவு அதிகரித்து அதன் மீது அமைந்துள்ள கட்டிட அடித்தளங்களை மேலே தூக்க முயல்கிறது. இதன் காரணமாய் குறைந்த பாரத்தைச் சுமரும் கட்டிடப் பகுதிகள் தூக்கப்பட்டு சுவர்களில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன. நல்ல மண் என்று கருதப்படும் மணல் கூட காய்ந்த நிலையில் குறைந்த கன அளவையும், சிறிது நனைந்த நிலையில் மணற்துகள்களின் மேற் பரப்புகளில் நீர் ஒரு பிலிம் பூச்சு போல ஓட்டிக்கொள்வதால் மணலின் கனஅளவு அதிகரித்தும் காணப்படுகின்றன. அதே மணல் நீரில் முழுமையாய் மூழ்கும்போது ஆரம்ப கன அளவை அடைகிறது. ஆகவே சில வகை மண்கள், ஈரமாகும் வாய்ப்புள்ள ஆழத்தில் இருக்கும்போது அவற்றின் குறைக்கப்பட்ட வலிமை மட்டுமே வடிவமைப்பில் கருதப்படுகிறது.
வெற்றிட விகிதம் பொதுவாக மண் என்பது பல அளவுகளிலான வெவ்வேறு துகள்களின் தொகுப்பு ஆகும். இத் துகள்களுக்கு இடையே சிறிதளவு காலியிடங்கள் காணப்படுகின்றன. இக்காலியிடங்களில் பொதுவாக காற்று அல்லது நீர் நிரம்பியிருக்கும். மண்ணிலுள்ள வெற்றிடத்தின் கன அளவுக்கும் துகள்களின் திண்ம கன அளவுக்கும் உள்ள விகிதம் வெற்றிட விகிதம் எனப்படுகிறது. தளர்ந்த நிலையிலுள்ள மண்ணின் வெற்றிட விகிதம் அதிகமாக இருக்கும். அதே வேளையில் அதிக நெருக்க நிலையிலுள்ள மண்ணின் வெற்றிட விகிதம் மிகக் குறைவாக காணப்படும். தளர்ந்த நிலையிலுள்ள மண்ணின் மீது பளு சுமரும்போது அதன் துகள்கள் ஒன்றோடொன்று நெருக்கப்பட்டு வெற்றிடங்களின் ஒரு பகுதி நிரப்பப்படுகிறது. அவ்வெற்றிடங்களில் தண்ணீர் இருந்தால் அது வெளியேற்றப்படுகின்றது. மொத்தத்தில் மண்ணின் நிகர கன அளவு குறைகிறது. இதன் காரணமாய் கட்டிடம் பூமிக்குள் அமிழ்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இவ்வமிழ்வு நிகழுமாயின் அக்கட்டிடம் பயனற்றதாகி விடுகிறது. வெற்றிடம் அதிகமுள்ள மண் அதிக அளவில் ஈரத்தை உரியக் கூடியவையாகவும் அமைகின்றன.
பொருள் அடர்த்தி
இக்குளம் மண்ணின் துகள்களின் பகிர்மானத்தைத் குறிக்கிறது. அடர்த்தி அதிகரிக்கையில் அதன் சுயபளு அதிகரிக்கிறது. தாங்கு திறன் மற்றும் வெட்டு எதிர்ப்புத் திறன்களும் அதிகரிக்கின்றன. பொதுவாக பூமியின் மேல் மட்டத்தில் உள்ள மண்ணின் அடர்த்தி குறைவாயும் ஆழத்தில் உள்ள மண்ணின் அடர்த்தி அதிகமாகவும் உள்ளன. இதற்கு அந்த குறிப்பிட்ட அடுக்குக்கு மேல் பல ஆண்டுகளாக ஆழுத்திக்கொண்டு அமர்ந்திருக்கும் மேல் மண்ணின் பளுவே காரணம்.
குழைவுத்தன்மை
காய்ந்த நிலையில் உறுதியாய் இருக்கும் களிமண் சிறிது நீர் கலந்து வெளி விசைகளுக்குள்ளாகும் போது குழைந்து எந்தவொரு உருவத்தையும் அடையும் நிலையையடைகிறது. குறைந்த ஆழத்தில் இந்த நிகழ்வு நடைபெறுமாயின் இந்த மண் பிதுங்கி கட்டிட அடிப்பகுதியை விட்டு பளு சுமக்காத அண்டைப் பக்கங்களை நோக்கி நகருகின்றன.
இது கட்டிட அமிழ்வுக்கு வழி வகுக்கிறது.
துகள் கலப்பு விகிதம்
மிகக் பெரும்பாலான இடங்களில் வெவ்வேறு ஆழங்களில் மண் மாதிரிகள் சோதிக்கப் படும்போது அவை ஒரே குறிப்பிட்ட வகையில் அமையாமல் பலவகை மக்களின் கலவையாகவே காணப்படுகின்றன. சில இடங்களில், சணல், பெருமணல், குறுமணல், களிமண், வண்டல் ஆகிய அனைத்து வகையும் வேறுபட்ட விவாதங்களில் கலந்து காணப்படும் மண் காணப்படுகிறது. இத்தகைய கலப்பட மண்ணின் தன்மைகளை அறுதியிட்டு கணிப்பது மிகவும் சிரமம். பொதுவாக களிமண், கரிசல்மண், வண்டல்மண் ஆகிய விகிதாச்சாரத்தில் அமைந்த மண் ஒட்டுந்தன்மையுள்ள மண் என்றும் சரல், மணல் ஆகியவை அதிக விகிதாசரத்தில்
அமைந்த மண் ஒட்டுந்தன்மையற்ற மண் என்றும் பெருவகைப் படுத்தப்பட்டு அவற்றிற்கேற்ப அடித்தளங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இரசாயன தன்மைகள்
மேற்குறிப்பிட்ட தன்மைகள் தவிர நீர்புகுதன்மை, நுழைவெதிர்ப்பு தன்மை, சரியும் தன்மை, பளுதாங்கு திறன், வெட்டு எதிர்ப்புத் திறன், ஒட்டிப் பிடிக்கும் தன்மை, கரையும் தன்மை போன்ற பௌதீக குணங்களுடன், மண்ணிற்கு ,அமிலத்தன்மை, உப்புத்தன்மை, அரிக்கும் தன்மை போன்ற முக்கிய இரசாயன குணங்களும் உள்ளன. சில மண்களில் தொடர்பு கொள்ளும் கான்கிரீட், இரும்பு, செங்கல் போன்ற கட்டிடப் பயன்பாட்டுப் பொருட்களுக்கு அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
மண் பரிசோதனையின் அவசியம்
மண்ணில் பல வகைகள் உள்ளன என்றும் அவை பல வேறுபட்ட தன்மைகளைப் பெற்றுள்ளனவென்றும் அத்தன்மைகளுக்கேற்ப அவற்றின் பளுசுமக்கும் திறன் வெகுவாய் மாறுபடுகின்றன என்றும் சுருக்கமாய் பார்த்தோம். உதாரணமாக நன்கு இறுகிய நிலையிலுள்ள பெருமணல் ஒரு சதுரமீட்டர் பரப்பில் 450 கிலோ நியூட்டன் பளுவை பாதுகாப்பாய் சுமக்கும் போது, தளர்ந்த நிலையிலுள்ள காய்ந்த சிறுமண் 100கிலோ நியூட்டன் பளுவை மட்டுமே பாதுகாப்பாய் சுமக்கும் வலிமையைப் பெற்றுள்ளது. மேலோட்டமாய் பார்த்தால் இரண்டும் மேல்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக