கட்டுமான கம்பிகள்
தொடக்க காலத்தில் கான்கிரீட் தேவைகளுக்கு வலிமையில்லாத ரவுண்டு கம்பிகள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டு அதன் பலவீனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வலுவூட்டப்பட்ட டி. எம். டி(TMT) கம்பிகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் அழுத்தத்திறனை (Compression) எதிர்க்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் நீள்திறனை (Tension) எதிர்க்கும் ஆற்றல் அதற்குக் கிடையாது. எஃகுக் கம்பிக்கு நீள்திறனை எதிர்க்கும் ஆற்றல் உண்டு. கம்பியையும் கான்கிரீட்டையும் பொறியியல் சமன்பாட்டிற்கேற்ப (Engineering Equations) கலந்தால் அத்தகைய கான்கிரீட் நீள்திறனையும், அழுத்தத் திறனையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் ஆற்றல் பெறுகின்றது. கம்பிகளின் தன்மைகளும்&வகைகளும் 1) இலகுவான எஃகுக் கம்பிகள் (Mild Steel) 2)முறுக்கேறிய கம்பிகள் (Twisted Steel) 3)சூட்டில் உருட்டிய கம்பிகள் (Hot rolled Steel) இலகுவான எஃகுக் கம்பிகளை முறுக்கேற்றுவதன்(Twisting) மூலம் கம்பியின் செறிவு(Density) அதிகரிப்பதால் கம்பியின் நெகிழ்தகைவு (Yield Stress) கூடுகிறது. அதனால் கம்பியின் வலிமை கூடுகிறது. மேலு...
கருத்துகள்
கருத்துரையிடுக