கட்டுமான சிமெண்ட்
சிமெண்டின் வகைகள்
1) சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட்
2) போர்ட்லேண்ட் பொசலோனா சிமெண்ட்
3)விரைவில் கேட்கப்படும் சிமெண்ட்
4) சல்பேட் எதிர்ப்பு சிமென்ட்
5)போர்ட்லேண்டு கசடு சிமென்ட்
6)குறைந்த வெப்ப வெளியிடு சிமெண்ட்
7)காற்றடை சிமெண்ட்
8)நீர் விலக்கு சிமெண்ட்
9)வண்ணமுடைய சிமெண்ட்
10)கட்டுமாண சிமெண்ட்
11)விரிவடையும் சிமெண்ட்
12)IRS-T40 சிறப்புத்தர சிமெண்ட்
13)எண்ணெய்க் கிணறு சிமெண்ட்
14)மிகுவிரை குட்டிச் சிமெண்ட்
15)மிகுந்த அணுமின் சிமெண்ட்
இவற்றில் சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட்டும்(OPC) மற்றும் போர்ட்லேண்ட் பொசலோனா சிமெண்ட்டும் அதிக அளவில் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை அனைத்தும் ஒரு வகை சிறப்புத் தன்மை கொண்டவை. ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு, வேலைக்கேற்பப் மிக மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது OPC எனப்படும் சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட் இந்த OPCஇல் மூன்று வகையான தரமுடையவை உள்ளன.
OPC-33 தரம்(28 நாள் அமுக்கத் தகைவு-33N/ச. மி. மீ வலிமை
OPC-43 தரம் (28 நாள் அமுக்கத் தகைவு-43N/ச. மி. மீ வலிமை
OPC-53 (28 நாள் அமுக்கத் தகைவு-53N/ச. மி. மீ வலிமை
குறிப்பாகவும், சிறப்பாகவும் உறுதி பெற்ற காங்கிரீட்(Reinforced Concert) வேலைகளுக்கு OPC 53 தூரத்திலேயே பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறே பூச்சு வேலைகளுக்கு OPC-53 தரமுடைய சிமெண்ட்டைப் பயன்படுத்தினால் சுருக்க விரிசல்கள்(Shrinkage Cracks-Hairline Cracks) பெரிதும் ஏற்படும். எனவே OPC 53 தரமுடைய சிமெண்டை இத்தகைய வேலைகளுக்கும் பயன்படுத்தாமல தவிர்க்க வேண்டும்.
மாற்றாக இந்நிகழ்வுகளில் PPC எனப்படும் ஏரிச்சாம்பல் கலந்த கூட்டுச் சிமெண்ட்/கலந்த சிமண்ட்(Composite Cement /Blanded Cement) வகைகளையே கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இவற்றின் மேம்பட்ட நன்மைகள் பயனான இயல்புகள் கீழே பட்டியலிடப்படுகின்றன.
1) விலை குறைவானது
2) மிகுதியான வெப்பத்தை உருவாக்காததால் சுருக்க கிரகங்கள் ஏற்படாது.
3) மிக மோசமானசுற்றுச்சூழலில் மிகுந்த ஏதிர்ப்புத் திறன் கொண்டவை.
4) எளிதில் துருப்பிடிப்பதைத் தடுப்பவை.
5) நாள் செல்ல செல்ல குறிப்பாக 90நாள்/180நாள் வலிமை தாங்கு திறனில் OPC 53தர சிமெண்ட் பயன்படுத்திய கான்கிரீட்டை விட PPC சிமெண்ட் கூடுதல் தாங்குதிறன் கொண்டவை. உடை இழுவைத் திறனிலும்(Split Tensile Strength) மற்றும் வளைவு தாங்குதிறனிலும்(Flexural Strength) PPC கலந்த கான்கிரீட்டே மிகுந்த திறனுடையது. நீடித்து நிற்கும் உறுதி (Better Durability) கொண்டது. எனவே எல்லா வகையான உறுதி பெறு கான்கிரீட் வேலைகளுக்கும் பூச்சு வேலைகட்கும்
இந்த வகை PPC-Fly ash Based Blended Cement /Composite Cement மிகவும் பொருத்தமானது நல்லியல்புகளைக் கொண்டவை.
இத்தகைய கான்கிரீட் கூடுதல் கெட்டித் தன்மையுடையதாக உள்ளது. குறைந்த அளவில் மின் கடத்தும் திறனுடையது. எனவே, துருப்பிடித்தலைத் தாமதப்படுத்துகிறது, தவிர்க்கிறது உப்புக்களின் இணைப்பினை மிகுவிக்கிறது(Increased Chloride binding) கான்கிரீட்டின் கெட்டித் தன்மையினை(Soundness of Cement) குறிக்கிறது.
பொதுவாக சிமெண்டு காட்டுமானங்களில் ஏற்படும் சிறிய வெடிப்புகள் மற்றும் நுண்துளைகள் மூலம் நீர் மாசு மற்றும் காற்றில் கலந்துள்ள ரசாயன வாயுக்கள் ஆகியவை உள்ளே நுழைந்து கசிவு மற்றும் அரிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. கான்கிரீட்டில் உள்ள கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற வேதிப்பொருள் நுண் துளைகள் வெடிப்புகள் வழியாக கசிந்து கான்கிரீட்டின் மேற்பரப்பிற்கு வருகிறது. அது காய்ந்து வெண்மை நிறத்தில் கால்சியம் ஹைட்ராக்சைடு(சுண்ணாம்பு)மற்றும் கால்சியம் கார்போனேட் ஆகியவற்றை உருவாக்குகிறது. அதனால் கான்கிரீட் அரிக்கப்பட்டு படிப்படியாக கிடைக்கிறது. இதை தடுப்பதற்கு கால்சியம் கிரிக்கெட் அல்லது ஹைட்ரேட் கூடுதலாக உள்ள சிமெண்டு வகைகளை பயன்படுத்தலாம்.
சிமெண்ட்டில் நீர் சேர்த்தவுடன் வேதிவினை தொடங்கிவிடுவதோடு குறிப்பிட்ட நேரம் வரை நெகீழ்வான நிலையில் இருப்பதால் தேவையான வடிவங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. சிமெண்டு கலவை கலப்பது எடுத்து சென்று பணிகளை செய்வது ஆகியவற்றை தொடக்க நிலை இறுகும் நேரத்திற்குள் செய்வது முக்கியம். அதன் பிறகு சிமெண்டு கலவையில் அளவுகள் மற்றும் அதிர்வுகள் ஏற்படக்கூடாது.
இந்திய தர நிர்ணய விதிகளின்படி சிமெண்டுக்கான தொடக்க நிலை இறுகும் நேரம் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் என்றாலும் இந்திய தட்ப வெப்ப நிலை மற்றும் கலவையை இயக்குதல், பூசுதல், கான்கிரீட் போடுதல் ஆகிய பயன்பாட்டு நேரங்களை கருத்தில் கொண்டு சிமெண்டு பயன்படுத்துபவர்கள் உதவியாக ஒரு மணி நேரத்தக்கும் மேலாக செட் ஆகாமல் இருக்கும் சிமெண்ட் வகைகளும் சந்தையில் கிடைக்கின்றன.
சிமெண்ட் கலவை தனது நெகிழ்வு தன்மையிலிருந்து மாறியது முதல் இறுதி இறுகும் நேரம் தொடங்குகிறது. அதன் பிறகு சிமெண்ட் கலவை படிப்படியாக கடினமான தன்மைக்கு மாறுகிறது. இந்திய தர நிர்ணயத்தின்படி சிமெண்டின் இறுதி நிலை இறுகும் நேரம் அதிகப்பட்சமாக 600 நிமிடங்கள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 300 நிமிடங்களுக்குள் செட் ஆகும் சிமெண்ட் வகைகளும் இப்போது கிடைக்கின்றன.
சிமெண்டின் கன பரிமாணங்கள் மாறாமல் ஓரே தன்மையில் இருப்பது உறுதிநிலை(Soundness) ஆகும். அந்த நிலையில் சிமெண்ட் கலவை விரிவடைந்தால் அதில் கிரகங்கள் ஏற்படும். எனவே இறுகிய சிமெண்ட் கலவை கன பரிமாணம் மீறக்கூடாது. இந்திய தர நிர்ணயத்தின்படி 10 மில்லிமீட்டருக்கு மேல் விரிசல்கள் இருக்ககூடாது.
பொதுவாக கட்டுமான அமைப்புகளில் பயன்படுத்தும் சிமெண்ட் வகைகளில் பி. பி. சி எனப்படும் போர்ட்லேன்ட் பொசலோனா சிமெண்ட்(PPC) I'm முக்கியமானது.
அனல் மின் நிலையங்களில் இருந்து பிளை ஆஷ் எனும் பொசலோன் பொருளை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. அதில் உள்ள 'ரியாக்டிவ் சிலிக்கா'என்ற வேதிப்பொருள் கான்கிரீட்டுக்கு வலிமை சேர்ப்பதாக அறியப்பட்டுள்ளது. மேலும் சிமெண்ட் தயாரிப்பில் பிளை ஆஷ் பயன்படுவதால் மாசு கட்டுப்பாட்டுக்கு உதவியாக இருப்பது புவி வெப்ப மயமாதலையும் பெருமளவு குறைக்கிறது
ஓ. பி. சி(OPC) என்ற ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட் என்பது கான்கிரீட்டில் விரைவாக உறுதியை கட்டமைக்கும் தன்மை கொண்டதாக இருந்தாலும் கட்டுமானங்களின் நீடித்த ஆயுள் மற்றும் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை ஒப்பிடும் பட்சத்தில் பி. பி. சி என்ற போர்ட்லேண்ட் பொசலோனா சிமெண்ட் நல்ல பலன்களை தரக்கூடியது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் இவ்வகை சிமெண்ட் மூலம் அமைக்கப்பட்ட கான்கிரீட் அடர்த்தியாக இருப்பதோடு, எளிதாக நீர் ஊடுருவும் தன்மையும்(Permeability) குறைவு என்ற நிலையில் இரும்பு கம்பிகள் துரு பிடிக்கும் வாய்ப்புகள் குறைவாகவும்.
தரமான சிமெண்டு கண்டுபிடிப்பது எப்படி
1)சிமெண்ட்டை தேர்வு செய்யும் பொது பி. ஐ. எஸ் தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் சிமெண்ட்டை தேர்வு செய்ய வேண்டும்.
2)தேர்வு செய்யும் நிறுவனத்தின் சிமெண்ட் மூட்டையின் மீது அந்த நிறுவனத்தின் பெயர் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா?மூட்டையின் வாய்ப்பகுதி கையால் தைக்கப்படாமல் இயந்திரத்தில் தைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும். மூட்டையின் வாய்ப்பகுதியில் தையல் பிரிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3)சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூட்டையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் இருக்கும் சிமெண்டை வாங்குவதுநல்லதாகும்.
4)சிமெண்ட் மூட்டையினுள் கைவிட்டு சிமெண்ட்டை தொடும்போது, குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு கையில் சிமெண்டை அள்ளி ஒரு வாளி நீருக்குள் போடும்போது சிமெண்ட் சில நிமிடங்கள் மிதந்த பின்பே நீரில் கரைய வேண்டும். பட்டவுடன் நீரில் கரையும் சிமெண்ட் வகைகள் அவ்வளவு நல்லதல்ல.
5)சிமெண்டைக் கொஞ்சம் எடுத்து அதை பேஸ்ட் போலக்குழைத்து ஒரு அட்டை அல்லது பிளேட்டில் சதுரவடிவத்தில் அமைக்கவேண்டும். அதை அப்படியே மெல்ல நீரில் அமிழ்த்தும்போது, அந்த வடிவம் அவ்வளவு எளிதில் கரையக்கூடாது. ஒரு நாள் கழித்தே அது இறுகி கடினமானதாக மாறவேண்டும்.
6)சிமெண்டை கைகளில் எடுத்து விரலில் வைத்து தேய்க்கும் பொது கல்துகள்களை தேய்ப்பது பால் இருக்ககூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக