அஸ்திவாரம் அமைப்பு
அஸ்திவாரம் என்னும் கடைக்கால் (Foundation) அமைத்தல் கட்டிடத்திற்கு முதலும் முக்கியமானதுமான பணி ஏனெனில் ஓட்டுமொத்த கட்டிடத்தின் வலுவும் இந்த அஸ்திவாரத்தில் தான் இருக்கிறது. பாரத்தை தாங்குவதும் அதைப் பூமிக்குச் செலுத்துவதும் கடைகாலின் பணி.
இடத்தின் மண் தன்மைக்குப் ஏற்ப கடைக்காலின் பணிகள் மாறுபடும்(ஊதாரணத்திர்க்கு)
ஒரு மணற்பாங்கான இடத்தில் அடித்தளம் அதன் கீழ் உள்ள மண்ணின் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 9 டன் பாரத்தை சுமக்கிறது என்றால். இந்த பளுவை தாங்கும் மண் சுமாராக அதில் மூன்றில் ஒரு பங்கு பளுவை, அதாவது சதுர மீட்டருக்கு 3 டன் பாரத்தை கிடைமட்ட திசையில் வெளியே அருகில் அமைந்துள்ள மண்ணின் மீது செலுத்துகிறது. அந்த மண் நகர முடியாத நிலையில், அப்பாரத்தில் மூன்றில் ஒரு பங்கு பாரத்தை, அதாவது சதுர மீட்டருக்கு 1 டன் பாரத்தை, மேல் நோக்கி செலுத்தும். நம் காலில் மிதிபடும் சகதி பிதுங்கி எழுவதைப் போல, இந்த மண்னை மேல் நோக்கி நகர அனுமதித்தால் அடித்தளம் தொடர்ச்சியாக மண்ணிற்குள் அமிழ ஆரம்பிக்கும். ஆகவே அடித்தளத்தைச் சுற்றியுள்ள மண் மேலே எழும்பா வண்ணம் கீழ் அழுத்தி வைக்கப் படவேண்டும். அவ்வாறு அழுத்துவது எது என்றால் அந்த குறிப்பிட்ட அடித்தள மட்டத்துக்கு மேல் உள்ள மண்னின் சுய பாரம்தான். அம்மண்ணின் அலகுப் பளு கன மீட்டருக்கு 1.33டன் என்றால் 1.5 மீட்டர் உயர மண்ணின் பளு சதுர மீட்டருக்கு 2 டன் இருக்கும். அதாவது இந்த அடித்தளம் தரைமட்டத்துக்கு கீழ் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டால் அடித்தளத்திற்கு கீழுள்ள மண்ணானது எங்கும் நகராமல் பாரத்தைச் சுமக்கும்.
கடைக்கால் டீப் (Deep) ஷாலோ (Shallow) என்ற வகைகளில் பல விதங்களில், பல முறைகளிலும் அழைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் தனி வீடுகளுக்கு ஷாலோ வகைக் கடைக்கால் அமைக்கப்படுகிறது. இதில் இயற்கையான நிலப்பரப்பு மட்டத்திற்குக் (Natural Ground Level) கீழே நீளம், அகலம், ஆழம் அல்லது உயரம் என மூன்று அளவுகளைக்கொண்டு குழிதோண்டப்படுகிறது. இந்தக் குழியானது. எல்லா ஊர்களுக்கும் அனைத்து வகையான கட்டிடத்திற்கும் ஒரே அளவாகவோ ஒரே மாதிரியாகவோ அமையாது. மண்ணின் தன்மை, மலையின் நீர்மட்டம், கட்டிடத்தின் வகை ஓட்டுமொத்த சுமை ஆகியவற்றைப் பொறுத்து கடைக்கால் குழியின் நீளம், அகலம், ஆழம் கட்டிடத்திற்கு கட்டிடம் மாறுபடும். கடைக்கால் அமைப்பதில் மூன்று நிலைகள் உள்ளன.
ஆற்று மணல் நிரப்புதல்
(Sand Filling)
மண்ணில் கெடுதல் விளைவிக்கும் தன்மை இருந்தாலும் மண் கட்டிட சுமையின் அழுத்தத்தை தாங்கும் வலிமையற்று இருந்தாலும், களிப்பு(Clay) தன்மையாக இருந்தாலும் குழி தரை பரப்பில் மேடு பள்ளங்கள் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அதைத் திருத்திச் சமபடுத்தி அரண்போல் ஆற்று மணல் கடைக்காலைக் காக்கும்.
பி. சி. சி(Plain Cement Concert)
மணல் அழுத்தப்பட்ட பிறகு பி. சி. சி யை இட வேண்டும். பி. சி. சி என்பது கருங்கல் ஜல்லி, மணல், சிமெண்ட் ஆகியவற்றின் கலவையாகும். இவற்றை வேண்டிய விகிதத்தில் அதாவது குழிகள் சம மட்டத்தில் அமையும் விதத்தில் இடவேண்டும். சிலர் பி. சி. சி போட்ட உடன் அதன் மேல் அப்படியே தூண் பாதப் பகுதியை நிறுத்திவிடுகின்றனர். இது நல்லதல்ல. பி. சி. சிறைக் குறைந்தது ஒரு நாளாவது தண்ணிர் காட்டிப் பக்குவப்படுத்த (Water Curing)
வேண்டும்.
ஃபூட்டிங் (Footing)
மூன்றாவதாக செய்ய வேண்டியது ஃபூட்டிங் இது கம்பி கட்டும் முறை எனச் செல்லலாம். அடித்தள அமைப்பு முறை எனவும் செல்லலாம். பி. சி. சியின் மேற்பகுதியில் ஃபூட்டிங் அமைப்பை அனைத்துக் குழிகளுக்கும் சிமெண்டால் வருவி வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் தூணின் பாதப்பகுதி இதில் படல் (Mat) தூண் (Column) என்னும் இரண்டு பகுதிகளைக் கண்டது. படமானது தூணின் கீழ் பக்கம் வெவ்வேறு தடிமன் கொண்ட இரு கம்பிகள் சம இடைவெளியில் குறுக்கும் நெடுக்குமாக வைத்து அமைக்க வேண்டும்.
படல் கம்பிகள் அனைத்து முனைகளும் மேல் நோக்கி வளைத்து விடப்பட வேண்டும். படகின் மேற்பகுதியில் தூணுக்கான கம்பியை நிறுத்த வேண்டும். பின்பு படல் பகுதி முழுமைக்கும் கான்கிரீட் இடவேண்டும்.
ஃபூட்டிங் கான்கிரீட் தேவைக்கு எற்றபடி நிரப்பிய பின் அதன் மேல் பாகத்தில் நான்கு முனைகளையும் சமமாக கான்கிரீட்டை சரித்து (Tapper) செய்ய வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக