உங்களுக்கு சொத்தை விற்க முன் வருபவர், ஒரு விற்பனை ஆவணம் வாயிலாகத்தான் அதை அடைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேறுசில வகையிலும் அவர் அந்தச் சொத்துக்கு உரிமையாளராக ஆகியிருக்ககூடும். அவருடைய தாயோ, தந்தையோ,தாத்தா,பாட்டி அல்லது வேறு நெருக்கமான உறவினர் எவருமோ, சொத்தை அவருக்கு அளித்திருக்ககூடும். இது அறுதியாவணம் (Settlement deed) என்று குறிப்பிடப்படும். இந்த ஆவணத்தின் மூலம் ஒருவர் சொத்தின் மீது பரிபூரண உரிமை அடைய முடியும். அப்படி பரிபூரண உரிமையை அவர் அடைந்தாரா என்பதைச் சொத்தை வாங்ககூடிய நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை எப்படி உறுதிப்படுத்திகொள்வது? அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. அந்த ஆவணத்தை நன்றாக ஆழ்ந்து படித்தாலே உணர்ந்துகொள்ள முடியும். சொத்தை இப்படி அறுதியாவணம் மூலம் எழுதிக் கொடுப்பவர்கள் பூரண உரிமையுடன் தரலாம். அல்லது தங்களுக்கு வாழ்நாள் உரிமையை நிறுத்திக்கொண்டு சொத்தினைத் தரலாம்,அல்லது வேறு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாம். குறிப்பிட்ட சொத்தின்மேல் அறுதியாவணத்தில் வாழ்நாள் உரிமையை நிறுத்திக்கொண்டிருந்தால், எழுதிக் கொடுப்பவர் இன்னும் உயிரோடு...