அப்ரூவல் விளக்கம்
விட்டு மனைகளை வாங்கும் முன் முதலில் சி. எம். டி. ஏ (CMDA) அப்ரூவல் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். சி. எம். டி. ஏ மற்றும்டீ. டி. சி. பி வழங்குவது திட்ட அனுமதி
(Planning Permission) இதை தவிர்த்து கார்பரேஷன், முனிசிபாலிட்டி, யூனியன், பஞ்சாயத்து போன்ற இடங்களில் வழங்குவது கட்டிட அனுமதி (Building Permission)
வருடத்திற்கு ஒரு முறை வீடு கட்ட முறைப்படிதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சி. எம். டி. ஏ மற்றும் டீ.டி. சி.பி அடிட் செய்வார்கள். இது தான் விதிமுறை. அனுமதிக்கப்பட்ட நிலப்பிரிவில் பஞ்சாயத்து அப்ரூவல் வழங்கலாம். ஏனெனில் கட்டிட அனுமதி வழங்குவது பஞ்சாயத்துதான். இதை சி. எம். டி. ஏ அல்லதுடீ. டி. சி.பி வழங்குவதில்லை.
சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களில் வசிக்கும் மக்கள் எல்லா வீடுகளுக்கும், பிளாட்களுக்கும் டீ. டி. சி. பி அப்ரூவல் வாங்க அனுக வேண்டியதில்லை. சின்ன சின்ன கட்டிடங்கள் வீடு கட்ட அந்தந்த பகுதியை சேர்ந்த முனிசிபாலிட்டி கார்பரேஷன் மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் வாங்கினால் போதுமானது. இதற்கான அதிகாரத்தை சி. எம். டி. ஏ மற்றும் டீ. டி. சி. பி வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி திட்ட அனுமதியும், கட்டிட அனுமதியும் சேர்த்தே உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம். இதற்கு சில சட்டதிட்டங்கள் உள்ளன.
இதுவே சென்னையில் பெரிய வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதாக இருந்தால் சி. எம். டி. ஏ அனுமதி வேண்டும்.
சி. எம். டி. ஏ
சென்னை மாநகர பெருவளர்ச்சி குழுமம்
(Chennai metropolitan development authority)
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான லேஅவுட் மற்றும் கட்டிட அனுமதியை சி. எம்.டி.ஏ வழங்கி வருகிறது.
மனை லேஅவுட் மற்றும் கட்டிட அனுமதியைப் பொறுத்தவரை சி. எம். டி. ஏ எல்லைக்குள் இருந்தால் எந்த அளவாக இருந்தாலும் சி. எம். டி. ஏ வின் அனுமதி பெறுவது அவசியம்.
சி. எம். டி. ஏ வின் எல்லைக்குள் நகராட்சிகள் வந்தால் அவற்றின் மூலம் சி. எம். டி. ஏ அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குடியிருப்புகளைக் கட்டி விற்கும் புரோமோட்டர்களிடமிருந்து நீங்கள் வீடு வாங்குவதாக இருந்தால் அவர்களுடைய லேஅவுட் வரைபடத்தைக் கேட்டு வாங்கி, அதில் சி. எம். டி. ஏ அப்ரூவல் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கட்டப்பட்டிருந்தால் அது முறையான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதை ஒரு வழக்கறிஞர் மூலமாகத் தெரிந்து கொள்வது அவசியம்.
டி. டீ. சி. பி
நகர ஊரமைப்பு இயக்குநகரம்
(Directorate of Town & Country Planning)
சி. எம். டி. ஏ எல்லையைத் தாண்டிய மனைகளுக்கு டீ. டி. சி. பி அப்ரூவல் வழங்கப்படுகிறது. (சென்னை முழுவதும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரின் சில பகுதிகள் தவிர்த்து)
டீ. டி. சி. பி அப்ரூவல் என்றால் குறிப்பிட்ட லேஅவுட்டில் பூங்கா, சமூகநலக்கூடம் பள்ளிக்கூடம், கடைகள் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்க வேண்டும். அது தொடர்பான இடத்தை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.
லேஅவுட்டில் பிரதானச் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 35 அடியாகவும் மனைகளுக்கு உட்பட்ட சாலையின் அகலம் 23 அடியாகவும் இருந்தால் மட்டுமே அப்ரூவல் கிடைக்கும்.
நான்கு மாடிகளுக்கு மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களுக்கான அனுமதியும் இதன் கீழ்தான் வருகிறது.
நிலத்தில் லேஅவுட் போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் அனுமதி தேவைப்படும்.
அப்ரூவல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ. டி. சி. பி தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
அப்ரூவல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால் அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டீ. டி. சி. பி அலுவலகத்தின் அனுமதி தேவை.
இதில் லேஅவுட் ஒரு கிராமப் பகுதியில்இருந்தால். அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லேஅவுட் பிளானை சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்கள் அதை சரிபார்த்து விட்டு மாவட்ட டீ. டி. சி. பி அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பிவைப்பார்கள்.
பாஞ்சாயத்து அப்ரூவல்
பொதுவாக கால் ஏக்கருக்கு (10,890சதுர அடிகள்) உட்பட்ட லேஅவுட் பஞ்சாயத்து அப்ரூவலுக்கு கீழ் வருகின்றன.
நகரத்துக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒவ்வொரு பகுதியும் கிராமப்புற பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும். இவை கிராமப்புற முன்னேற்றத்துக்காக வீடுகள் கட்ட அனுமதி கொடுத்து வந்தன. இதற்கும் டீ. டி. சி. பி அப்ரூவல் பெற வேண்டும் என்பதுதான் விதி. முன்பு பட்டா இருந்தால் பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று வீடு கட்டலாம் என்ற ஒரு நிலை இருந்தது. புதிய கட்டுமானங்களால் கிராமப் பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் நிறைய கட்டிடங்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களுக்குள் வீடு கட்டாமல் போனால் மீண்டும் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர ஊரமைப்பு இயக்கம் ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லேஅவுட்டுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரமத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாயத்து தலைவர்களுக்கு எந்த லேஅவுட்டுக்கும் நேரடியாக அனுமதி வழங்க அதிகாரம் கிடையாது.
1) மனைகளைப் பிரித்து லேஅவுட் போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள் பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச்சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.
2) வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல் நிலை நீர்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்கள் செலுத்த சொல்வது வழக்கம்.
3) மொத்த மனை பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தபட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் தொடர்பு இல்லை என்றாகிவிடும்.
வழக்கமாக பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் 4000 சதுர அடிக்கு மேல் உள்ள மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் சி. எம். டி. ஏ அல்லது டி. டி. சி. பி க்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவர்களின் அனுமதி கிடைத்த பிறகு அதை ஊராட்சியில் விண்ணப்பித்து இன்னொரு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியை பெற்றுவிட்டால் வீடு கட்ட தொடங்கலாம். ஒரு வேளை சி. எம். டி. ஏ அல்லது டி. டி. சி. பி அனுமதி பெற்று அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் அனுமதி பெறாமல் இருந்தால், ஏற்கனவே சொன்னது போல் லேஅவுட்டில் 10 சதவீத இடத்தை ஊராட்சி அமைப்புக்குத் தானமாக எழுதித்தரவில்லை என்றாலே, அந்த குறிப்பிட்ட பகுதி புஞ்சை நிலம் என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும்.பின்னர் அந்த இடத்துக்கு பட்டா வாங்குவது வீடு அனுமதி வாங்குவது, வீட்டிக்கடன் வாங்குவதும் கடினமாகிவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக