ஆவண விளக்கம்
பட்டா
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துரை அளிக்கும் சான்றிதழ்.
இதில் மாவட்டத்தின் பெயர் ஊரின் பெயர் பட்டா எண் உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன் சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்நிலம் நன்செய் நிலம் அல்லது புன்செய் நிலம் என்னும் விவரமும் நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
சிட்டா
கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களில் ஒரு பதிவேடுதான்"சிட்டா"என்பது.இதில் யார் யாருக்கு எல்லாம் "பட்டா"கொடுக்கப்பட்டு இருக்கிறதே அதனுடைய விவரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கும். சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர் பட்டா எண்கள் என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விவரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விவரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அடங்கல்
கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களின் மற்றும் ஒரு பதிவேடு தான் அடங்கல் கிராமத்தில் இருக்கிற எல்லா நிலங்களுக்கு மேல் இருக்கிற பயிர்கள் செடிகள் மரங்கள் யார் பயிரிடுகிறார்கள் யார் அனுபவிக்கிறார்கள் என்ற விவரங்கள் பற்றி ஆண்டுதோறும் பதிவிட்டு எழுதி வைத்து இருப்பார்கள்.
அ. பதிவேடு
நிலையான அடிப்படையான இப்பதிவேடு கிராமத்தைப் பற்றிய புல எண் வாரியான விவரங்களை கொண்டதாகும். ஒரு கிராமத்தின் முழு விஷயங்களையும் தன்மையையும் தெரிந்து கொள்ள பயன்படும் பதிவேடு இது.
இப்பதிவேடு ஆண்டுதோறுமோ அல்லது அடிக்கடியோ மாறக்கூடிய ஆவணம் இல்லை இது ஒரு நீண்ட கால பதிவேடு. பெரும்பாலும் கிராமத்தை ஒட்டுமொத்தமாக நில அளவை செய்து ரீசர்வே செய்தார்கள் என்றால் அப்போது மட்டுமே அ. பதிவேடு திருத்தப்படும் அல்லது மாற்றப்படும். இப்போது தமிழகத்தில் இருக்கற அ. பதிவேடு 1980முதல்1987வரை கிராம நிலங்களை நில அளவை செய்து புதிய சர்வே எண்கள் கெடுத்து உருவாக்கப்பட்டது.
சர்வே செய்யப்பட்ட காலத்தில் நிலத்தை அனுபவித்த உரிமையாளரின் பெயர் அ. பதிவேட்டில் இருக்கும். அதனை வைத்து தற்போதைய உரிமையாளர்க்கும் அ. பதிவேட்டில் இருக்கும் உரிமையாளருக்கும் இடையேயான தொடர்பு ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
புலப்பட புத்தகம்
புலப்பட புத்தகம் FMB என்று அழைக்கப்படுகிறது. கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் சர்வே எண் வாரியாக நில அளவை துறையினரால் வரையப்பட்டு புத்தகமாக போட்டு வைத்து இருப்பர். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு சர்வே எண்ணின் வரைபடம் போடப்பட்டு இருக்கும். இந்த வரைபடமே FMB ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக