பட்டா விவரம்

               பட்டாவின் வகைகள்

1.  நஞ்சை
2. புஞ்சை
3. மானாவாரி

    அரசு இந்த மூன்று வகைகளில் தான் பட்டா கொடுக்கும்
     பட்டா என்பதற்கு முழு அர்த்தம் "நில உரிமைச் சான்று"எனச் செல்லலாம்.

1) பத்திரப்பதிவுத்துறையின் கீழ் வருவது பத்திரம்
2) வருவாய்த்துறையினர் கீழ் வருவது பட்டா
    பட்டா தான் உங்கள் நிலம் உங்களுக்கு சொந்தமானது என வருவாய்த்துறை செல்லும் முக்கியமான ஆவணம் ஆகும்.
   
எதற்கெல்லாம் பட்டா விண்ணப்பம் செய்யப்படுகிறது?

1) வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டது
(அ)  அரசால் வாங்கப்பட்டது
(ஆ)  தமிழர்களின் வாங்கப்பட்டது.

2) நீதிமன்ற ஆணையின் பேரில் விற்பனை அல்லது மாற்றம் செய்யப்பட்டது.

3) தனியார் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில் மாற்றப்பட்டது.

4) வாரிசு உரிமையினால் மாற்றப்பட்டது.

5) 12 ஆண்டுகள் அல்லது அதற்குமேல் தொடர்ந்து அனுபோகம் செய்திருந்தாலும் அதுபோன்ற காலத்திற்கு பதிவு பெற்ற பட்டாதாரர்
காணப்படாத போனாலும் மாற்றப்பட்டவை.

6) வாரிசு அற்று அரசாங்கத்தை சேர்ந்த நிலங்கள்.

   ஒரு தனி நபரின் பெயரில் இருக்கும் பட்டா "தனிபட்டா"
    ஒரு பட்டியில் பல பேரின் பெயர் இருப்பின் அதற்கு கட்டுப்பாட்டு என்று பெயர்.

  உதாரணமாக உலகநாதன் என்று ஒரு நபர் இருக்கிறார். அவருக்கு நான்கு மகன்கள்.  அவரின் செத்து 2400 சதுர அடிகள் இருக்கிறது.
  உலகநாதன் இருக்கும் பொது அல்லது இறந்த பின்பு அந்த சத்துக்களை பிரித்தால் அவரின் நான்கு மக்களுக்கும் ஆளுக்கு 600 சதுர அடிகள் வரும். உலகத்தின் நிலம் 300 என்கிற சர்வே என்னில் இருக்கிறது என்றால்.  இந்த செத்தை நான்காக பிரிக்கும் பொது 300ஏ, 300பி, 300சி என சர்வே என்களாக பிரியும்.  இதற்கு இன்னொரு பெயர் தான் உட்பிரிவு செய்வது.

   இதை அத்தனையும் ஒரே ஆவணமாக வைத்து பட்டா தந்தார்களேயானால் அது தான் கட்டுப்பாட்டு. நாளை செத்தை விற்பனை செய்ய ஒருவர் ஆசைப்பட்டாலும் மற்ற மூவரின் சம்மதம் தேவை என்கிற நிலைதான் இதில் அதுவே இதை தனி ஆவணமாக பதிவு செய்து ஆளுக்கு ஒரு பட்டா குடுத்தால் அதுதான் தனிப்பட்ட.

             யூ. டி. ஆர் பட்டா

   யூடிஆர் என்பது நிலத்தை திருத்தி வழங்கப்பட்ட நாட்டிற்கும். தமிழத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நிலங்களை கணக்கெடுத்து வழங்கப்படும் பட்டா. (கடைசியாக கணக்கிட்டு 1984 ஆம் ஆண்டில்)
  உதாரணமாக ஒருவருடைய நிலம் குறுக்கு பாதையாக இருக்கிறது. அதனால் மக்கள் அவருடைய நிலத்தையே பயன்படுத்துகிறார்கள் அந்த நிலத்தின் உரிமையாளரும் சரி
போனால் போகட்டும் என விட்டு விடுகிறார் என வைத்துகொன்டால் அந்த நிலம் பொதுவான சாலையாக மாறிவிடும் வாய்ப்புண்டு.

     ஏடி.  கண்டிஷன் பட்டா

    ஆதி திராவிடர்களுக்குத் தரும் ஒரு வித கண்டிஷன்பட்டாவே ஏடி கண்டிஷன் பட்டா. இதில் சில நிபந்தனைகளை விதித்து பட்டா தருவார்கள். அதாவது 30 வருடங்களுக்கு விற்கக் கூடாது. 30 வருடம் கழித்து நிலத்தை வயிற்றிலும் ஆதி திராவிடர்கள் தான் விற்க முடியும்.  இப்படி கண்டிஷன் பேரில் தரும் பட்டா இது.

       டி கார்டு பட்டா

  இது ஏழைகளுக்கும் நிலமற்ற விவசாயிகளுக்கும் வழங்கப்படும் நிலம். காதலையும் கண்டிஷன் உண்டு. இந்த பட்டியல் பெற்றவர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு நிலத்தை விற்க முடியாது.

1) ஒரு தனிநபர் 12 வருட காலம் பட்டாதாரர் இல்லாமல் நிலத்தை உழுதும் பயிரிட்டு வந்து வரிகள் கட்டி வந்தால் அதற்கான ஆதாரமான ரஷிதுகள் இருந்தால் முன்னுள்ள பட்டாதாரருக்கு நோட்டீஸ் கெடுத்து ஆட்சேபனை இல்லை எனத் தெரிந்தால் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும்.

2) ஏழு வருடமும் அதற்கு மேல் மிட்டாதாரர் இருக்கும் இடம் தெரியாத பட்சத்தில் அவரின் வாரிசுக்கு பட்டா வழங்கலாம். அப்படி வாரிசு யாரும் இல்லாத பட்சத்தில் 'இன்னார் செத்தை தற்சமயம் வைத்துள்ள இன்னாருக்கு பட்டா மாறுதல் செய்யப்படுகிறது!  என மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்து அதன் பின் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும். அந்த இடத்தின் உரிமையாளர் மூன்று மாதத்திற்குள் ஆட்சேபனை செய்து உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு செய்து அந்த வழக்கு நகலை வட்டாட்சியருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3) கூடடுப்பட்டாதாரர் விஷயத்தில் கூட்டுப் பட்டாதாரராக ஒருவர் முழுபுலமும் அவருக்கு இல்லை என்று தெரிந்தால் அவரது பெயரை நீக்கி விட வேண்டும்.
  உட்பிரிவு செய்யும் பொழுது கூட்டுப்பட்டாதாரர் உட்பிரிவு செய்ய மனுகொடுத்தால் அந்த நிலம் பத்திரப்படி எல்லை இருக்கும் பட்சத்தில் கூட்டுப்பட்டாதாரர் சம்மதம் வாங்காமல் பட்டா மாறுதல் செய்யப்படலாம்.

  பாட்டுக்கு மனு செய்வது எப்படி

இனியவன் என்பவர் உலகநாதன் என்பவரிடமிருந்து நிலம் வாங்குகிறார். இருவரும் முறைப்படி பத்திரப்பதிவு துறைக்கு சென்று பத்திரத்தை பதிவு செய்து கண்டனர். புதிய பத்திரம் ஒரு வார காலத்திற்கு பிறகு. நிலம் வாங்கிய காதலனுக்கு வருகிறது.
(1) காதலனுக்கு வந்துள்ள புதிய பாத்திரத்தின் நகல்
(2)நிலத்தை விற்ற உலகநாதனுடைய பட்டா நகல்
(3)சமிபத்தில் போடப்பட்டுள்ள வில்லங்கம் சான்றிதழ்
(4) நிலம் வாங்கிய கதிரவன் இன்னார் தான் என்பதற்கான அரசாங்க ஆவணங்களுடைய நகல்

   இத்தனையும் எடுத்துக் காட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று நிலம் வாங்கிய இனியவன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து விண்ணப்பிக்கலாம்.

   கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றுவது

  எந்த பட்டாவாக இருந்தாலும் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். ஆனால் இதில் சர்வே செய்து முறையாக நிலத்தை பிரிக்கும் நடைமுறை இருக்கிறது. அதாவது உங்கள் நிலத்தை உட்பிரிவு செய்ய வேண்டும்.
  அதனால் சர்வேயருக்கு நிலத்தை அளக்க மனு செய்து விடலாம். சர்வேயர்களுக்குரிய அலுவலகம் வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் தான் உள்ளது. நிலத்தை அளந்து முடித்த பின்பு சர்வேயர் கெடுத்த ஆவணங்களை வைத்து வட்டாச்சியருக்கு நேரடியாக விண்ணப்பிப்பது தான் இந்த கூட்டுப் பட்டாதாரர்களுக்கு சரியான முறையாகும்.

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கட்டுமான கம்பிகள்

அஸ்திவாரம் அமைப்பு