ஆவண விளக்கம்

                       தனி பட்டா

   ஒரு தனிநபரின் பெயரில் இருக்கும் பட்டா தனிபட்டா.மேற்படி நிலத்தின் சர்வே என்னில் தனியாக சப்டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம.

     புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப்பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு,  புல எண் உட்பிரிவு,  FMB, சப்டிவிசன் ஆகியவற்றில் 100%தெளிவாக இருக்கும்.

                  கூட்டு பட்டா

     தனிபட்டாவுக்கு நேர் எதிர் கூட்டு பட்டா.  கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு,  சர்வே எண், உட்பிரிவு,  FMB, சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது.   உதாரணமாக உலகநாதன் என்று ஒரு தனி நபர் இருக்கிறார்.  அவருக்கு நான்கு மகன்கள்.  அவரின் சொத்துக்கள் 2400 சதுர அடிகள் இருக்கிறது.  உலகநாதன் இருக்கும் போதோ அல்லது இறந்த பின்போ அந்த சொத்துக்களை பிரித்தால் அவரின் மகன்களான நான்கு பேருக்கும் ஆளுக்கு 600 சதுர அடிகள் வரும். உலகநாதனின் நிலம் 300 என்கிற சர்வே என்னில் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த சொத்தை நான்காக பிரிக்கும் பொது 300ஏ, 300பி, 300சி என சர்வே எண்கள் பிரியும். இதற்கு இன்னொரு பெயர் தான் உட்பிரிவு செய்வது. இதை அத்தனையும் ஒரே ஆவணமாக வைத்து பட்டா தந்தார்களேயானால் அது தான் கூட்டுபட்டா.

              
                   
                   யூ. டி. ஆர் பட்டா

   யூ. டி. ஆர் (updating data Register) என்பது நிலத்தை திருத்தி வழங்கப்பட்ட பட்டாவாகும். (நத்தம் நிலங்களை தவிர)  1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதும் யூ. டி. ஆர் பட்டா தந்து அதனை கணினியில் ஏற்றினார்கள்.

        ஏ. டி கண்டிசன் பட்டா

   ஏ. டி கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் விட்டுமனைகள் இல்லாத பழங்குடியினர் &ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தை மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.
   அப்படி ஒப்படை செய்யும் போது கொடுக்கும் பட்டா ஏ. டி பட்டா ஆகும். பெரும்பாலும் பெண்கள் பெயருக்குதான் வழங்குவது மரபாக உள்ளது. இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும். உதாரணமாக முப்பது ஆண்டுகளுக்கு விற்ககுடாது. விற்றாலும் ஆதிதிராவிடர்களுக்கே விற்க வேண்டும்.

                   நத்தம் நிலவரி திட்டம்
           (தோராயபட்டா &தூயபட்டா)

   யூ. டி. ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள் அளந்தார்கள்.
   நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகைபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது. அந்த நத்தம் நிலத்திற்குதான் தோராய மற்றும் தூயபட்டா வழங்கினர்.
   
     தோராயபட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி,  குளம்,  வீடு,  தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரிதிட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு அரசு வழங்கியது.

    நத்தம் நிலவரிதிட்ட தோராய பட்டாவில் (பிழைகள் தவறுகள் இருக்கலாம்)  அதில் எதாவது சிக்கல்கள் பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா "தெரிய பட்டா" இது ஒரு தற்காலிகமான பட்டா.
  முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூயபட்டா ஆகும்.

            
                  நில ஓப்படைபட்டா
       (டிகார்டு கண்டிஷன் பட்டா)
    விட்டு மனைகள் விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். முன்னாள் ராணுவ வீரர்கள்,  பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள்,  நலிவுற்றவர்கள்,  அரவாணிகள் போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும்.  அதனை நில ஒப்படைபட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் பிறருக்கு வற்ககூடாது என்று கண்டிசன்கள் இருக்கும்.

          டி. எஸ். எல். ஆர் பட்டா

   டி. எஸ். எல். ஆர் பட்டா என்பது டவுன்சர்வே லேண்ட் ரெகார்ட் ஆவணம். இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணங்களில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு Extract எடுத்து கொடுப்பார்கள்.  இந்த TSLR Extract என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும்.

          தூசி பட்டா(2C பட்டா)

   கிராம கணக்கில் 2ம் நம்பர் புக்கில் 'C' பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசிபட்டா என்று அழைக்கப்படுகிறது.
     அரசு நிலத்தின் மேல் இருக்கும் மரங்களை அனுபவிக்க பாராமரித்து கொள்ள மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மரபட்டா என்றும் அழைப்பர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கட்டுமான கம்பிகள்

பட்டா விவரம்

அஸ்திவாரம் அமைப்பு