அஸ்திவாரம் என்னும் கடைக்கால் (Foundation) அமைத்தல் கட்டிடத்திற்கு முதலும் முக்கியமானதுமான பணி ஏனெனில் ஓட்டுமொத்த கட்டிடத்தின் வலுவும் இந்த அஸ்திவாரத்தில் தான் இருக்கிறது. பாரத்தை தாங்குவதும் அதைப் பூமிக்குச் செலுத்துவதும் கடைகாலின் பணி. இடத்தின் மண் தன்மைக்குப் ஏற்ப கடைக்காலின் பணிகள் மாறுபடும்(ஊதாரணத்திர்க்கு) ஒரு மணற்பாங்கான இடத்தில் அடித்தளம் அதன் கீழ் உள்ள மண்ணின் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 9 டன் பாரத்தை சுமக்கிறது என்றால். இந்த பளுவை தாங்கும் மண் சுமாராக அதில் மூன்றில் ஒரு பங்கு பளுவை, அதாவது சதுர மீட்டருக்கு 3 டன் பாரத்தை கிடைமட்ட திசையில் வெளியே அருகில் அமைந்துள்ள மண்ணின் மீது செலுத்துகிறது. அந்த மண் நகர முடியாத நிலையில், அப்பாரத்தில் மூன்றில் ஒரு பங்கு பாரத்தை, அதாவது சதுர மீட்டருக்கு 1 டன் பாரத்தை, மேல் நோக்கி செலுத்தும். நம் காலில் மிதிபடும் சகதி பிதுங்கி எழுவதைப் போல, இந்த மண்னை மேல் நோக்கி நகர அனுமதித்தால் அடித்தளம் தொடர்ச்சியாக மண்ணிற்குள் அமிழ ஆரம்பிக்கும். ஆகவே அடித்தளத்தைச் சுற்றியுள்ள மண் மேலே எழும்பா வண்ணம் கீழ் அழுத்தி வைக்கப் படவேண்டும். அவ்வாறு அழுத்துவ...
கருத்துகள்
கருத்துரையிடுக